பாபர் மசூதி இடிப்பு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-12-04 12:35 GMT

கன்னியாகுமரி,

டிசம்பர் 6-ந்தேதியான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்