பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடி உயர்ந்தது.;

Update: 2023-09-03 19:31 GMT

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடி உயர்ந்தது.

பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திடீர் மழை பெய்தது. நேற்று நெல்லையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் மீண்டும் வெயில் அடித்தது. மாலையில் லேசான சாரல் அடித்தது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அங்கு மழை குறைந்ததால் நேற்று நீர்வரத்து 942 கன அடியாக குறைந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் 54.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடி உயர்ந்து 56.02 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 345 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 72.93 அடியில் இருந்து 69.75 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 43.10 அடியில் இருந்து 43.60 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை உள் பகுதியில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது.

மழை அளவு

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

காக்காச்சி -1, நாலுமுக்கு -4, ஊத்து -2.

Tags:    

மேலும் செய்திகள்