அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம்

அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-07-10 17:53 GMT

அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மத்திய துணைத்தலைவரும், திருச்சி மாவட்ட செயலாளருமான ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார். இதில் அரியலூர் மாவட்டத்தில் 27 கிளை பொறுப்பாளர்களும் உழவாரபணி, அன்னதான பணி, ரத்ததான முகாம்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கும், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உண்டியல் எண்ணும் பணிக்கு அய்யப்பா சேவா சங்கத்தையும் ஈடுபடுத்திக்கொள்ள அனுமதி வேண்டியும், ஜெயங்கொண்டம் அன்னாபிஷேக வைபவத்திற்கு சங்கத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்