அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2023-05-21 20:14 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே இலுப்பைகுளம் ஸ்ரீதிருவேட்டை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதலாம் கால யாகசாலை பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நேற்று காலை 9 மணிக்கு புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு திருவேட்டை அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்