அய்யனார் கோவில் குடமுழுக்கு

திருவெண்காடு அருகே அய்யனார் கோவில் குடமுழுக்கு;

Update: 2023-02-16 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து கடந்த 14-ந் தேதி விநாயகர் பூஜை உள்ளிட்டவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-வது கால யாக பூஜை நடந்தது. இதில் மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது கோ பூஜை, லட்சுமி பூஜையும் நடந்தது. பின்னர் மேளம், தாளம் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் சன்னதி கோபுர கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அனந்தராமன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்