ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பழனி அருகே முறையாக குடிநீர் இணைப்பு கோரி ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;

Update: 2023-10-05 19:45 GMT

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆயக்குடியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்குவதாக கூறி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர். அதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள், ஆயக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விண்ணப்பித்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதையடுத்து கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆயக்குடியில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகைஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Tags:    

மேலும் செய்திகள்