போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்

போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2022-10-16 12:33 GMT


போடிப்பட்டி

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தவிர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி துங்காவி ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் சீலக்காம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை துங்காவி ஊராட்சி மன்றத் தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கணியூர் போலீசார் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்