தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
கரூர் மனோகரா கார்னரில் நேற்று தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானாவில் தொடங்கிய ஊர்வலம் ஜவகர்பஜார் வழியாக சென்று கரூர் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மழையால் ஆவது உலகு மரம் வளர்த்து பழகு, நீர் பாதுகாப்பு அவசியம், நீர்வளம் பெருக்குவோம், நீர்வளம் காப்போம், உயிர்களை காக்க தண்ணீரை காப்போம் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளின் நாடகம் நடந்தது.