வண்ணத்துப்பூச்சி பூங்காவில் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக வன உயிரின வார விழாவையொட்டி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
திருச்சி வன கோட்ட தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி மினி உயிரியல் பூங்கா உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் தலைமையில் உலக வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஓவியம், கட்டுரை, வினாடி-வினா ேபாட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் பிளாஸ்டிக்கை பயன்பாட்டை தவிர்க்க ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், மேரி லின்சி, உசைன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பறவைகள் ஆர்வலர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் தாமோதரன் நன்றி கூறினார்.