விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
தேனி அருகே விவசாயிகளுக்கு டுமெய்னி செயலி பயன்பாடு குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சியின் கீழ் தேனி மாவட்டத்தில் தங்கி, விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன்படி, தேனி அருகே தப்புக்குண்டுவில் வாழையில் அதிக நோய் தாக்கம் இருப்பதால், நோய்களை எளிதாக கண்டறிய உதவும் 'டுமெய்னி' செயலி பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவி ரித்திகா, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த செயலியின் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். மேலும், நோய் பாதித்த தாவரத்தை புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்தால், அதுகுறித்த தகவல்கள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கப்பெறுவது குறித்தும், அந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.