பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மானூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update:2023-05-31 00:27 IST

பேட்டை:

மானூர் யூனியன் அலுவலகத்தில் மானூர் ஊராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும், மஞ்சப்பையை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மானூர் மெயின் ரோடு, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் மஞ்சப்பை வழங்கினர். மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், மானூர் பஞ்சாயத்து தலைவர் பராசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்