பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சிறுவங்கூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி;
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சிறுவங்கூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். சிறுவங்கூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மந்தைவெளியில் முடிவடைந்தது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கொளஞ்சி, வார்டு உறுப்பினர்கள் முருகன், பொன்னம்மாள் சக்கரவர்த்தி, இமயவரம்பன், தனக்கொடி ஜெயராமன், சம்பத்ராஜன், மதியழகி ராமு, சுமதி மகேந்திரன், திலகம் ரங்கநாதன், தலைமை ஆசிரியர்கள் சுகுணா, திலகவதி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், துப்பரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.