பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தில் ஊராட்சி மன்ற சார்பில்பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வுபேரணிநேற்று நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர்ஆனந்தி பாண்டி மோகன்தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷினி கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தனக்கன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், முக கவசம் அணிவோம் என்ற வாசகங்கள் சார்ந்த போர்டுகளை சுமந்தபடி தனக்கன்குளம் மந்தை திடல் வரை பேரணியாக வந்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் சாந்திஜான்சன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.