சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி
வள்ளியூரில் சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு நீதிபதி பர்ஷாத் பேகம், தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் ஆன்ஸ் ராஜா, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு வக்கீல் ராம நாராயண பெருமாள், முத்துகிருஷ்ணன், வக்கீல் சமரச தீர்வு மையத்தின் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். பேரணியில் தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.