விழிப்புணர்வு பேரணி

கயத்தாறு பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-11 17:11 GMT

கயத்தாறு:

கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நமது குப்பை, நாமே என்ற வாசகத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை பேரணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன பாண்டியன், நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 40பேர், அலுவலக தூய்மை பணியாளர்கள் 60 பேர், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விமான சாலை, மதுரை மெயின் ரோடு, புதிய பஸ்நிலையம், வாரச்சந்தை வளாகம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்