அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் ‘நமது தொழில் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-08-17 20:15 GMT

ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் 'நமது தொழில் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். நிலைய முதல்வர் சரவணன் வரவேற்று பேசினார். நிலைய மேலாண்மை குழு துணை தலைவர் வஜ்ரவேல், உறுப்பினர் பாண்டியன், தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில், மாணவிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தொழில் முனைவோராக மாறிய பயிற்சி நிலைய முன்னாள் மாணவி அமுதாவிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சி நிலைய மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்றுனர் திலகம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்