அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
கரூர் மண்மங்கலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மண்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.