பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-06-28 19:20 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மருவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஏட்டு கீதா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தை தொடர்பு கொள்வதற்கான இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் குழந்தை தொழிலாளர் முறை குறித்து தெரிவித்து, அந்த பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட துணை நீதிபதி லதா, பள்ளி மாணவ, மாணவர்களிடம் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்