விழிப்புணர்வு ஊர்வலம்

நாகையில் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-09-20 18:45 GMT

பிளாஸ்டிக் இல்லா கடற்கரை மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்களை உபயோகிப்பதை முற்றிலும் தடுக்க வலியுறுத்தியும் நாகையில் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை பள்ளி முதல்வர் சித்ரா நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் ஒழிக்கவும், பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழல் மாசுபடாமல், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்