தேனியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
தேனியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது;
தேனி பங்களாமேட்டில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி 'போதை இல்லாத இந்தியா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார். இதில் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சாலையோரம் போதைப்பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷமிட்டபடி மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.
சிறுவர், சிறுமிகள் போதை பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தி முகங்களில் ஓவியம் வரைந்தபடி பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் தலைமையில் மாணவ-மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், துணை கலெக்டர் (பயிற்சி) முகமது பைசல், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.