மின்சார வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
மின்சார வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் ஆற்காடு கோட்ட மின்வாரியம் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் நடைபெற்றது. இதனை வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர்கள் ஆற்காடு நகரம் தனலட்சுமி, திமிரி சாந்தி பூஷன், கலவை சித்ரா, மாம்பாக்கம் மெஹபு உசேன் மற்றும் ஆற்காடு கோட்டத்தில் உள்ள அனைத்து பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.