விழிப்புணர்வு பிரசாரம்
களக்காடு புலிகள் காப்பம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகம், களக்காடு சூழல் திட்ட வனசரகம் சார்பில் களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதன் தொடக்க விழா களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தலைமை தாங்கினார். சூழல் திட்ட வனவர் சிவக்குமார் வரவேற்றார். நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் கொடி அசைத்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
இதில் உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) வினோத்ராஜ், சதீஷ்குமார், அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் மதிவாணன், லதா மதிவாணன், களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, வனசரகர் பிரபாகரன், வனவர் அப்துல்ரகுமான், கலுங்கடி கிராம வனக்குழு தலைவர் ஆனந்தராஜ், மிதார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் வன காப்பாளர் அபர்ணா நன்றி கூறினார்.