சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்
சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாமை முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் புத்தகங்கள் விற்பனை அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் திருவண்ணாமலை ஐ.டி.ஐ. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி மற்றும் நீதிபதிகள், பார் அசோசியேஷன், வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேஷன் தலைவர்கள், செயலாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.