விழிப்புணர்வு முகாம்
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தடுப்பு மற்றும் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தடுப்பு மற்றும் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். முகாமின் நோக்கம் பற்றி மாவட்ட நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் புதுராஜா பேசினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ராகவன் பேசுகையில், அயோடின் என்பது ஒரு சத்து, அது நம் உணவு பொருட்களில் உள்ளது, ஆனால் அந்த உணவு பொருட்களை நாம் உண்பது இல்லை என்றார்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், மதன் ஆகியோர் மாணவிகளிடம் அயாடின் தடுப்பு குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு அவர்கள் பரிசு வழங்கினர்.