ஓசோன் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஓசோன் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் ஓசோன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.