மின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

குன்னூரில் மின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-09-27 18:45 GMT

குன்னூர், 

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்பு அடைந்து உள்ளனர். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் குன்னூர் மின்வாரியம் சார்பில், விவசாயிகளுக்கான மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் குன்னூர் ஆரஞ்குரோவில் உள்ள அரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் செயற்பொறியாளர் சேகர் பேசினார். உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், உதவி பொறியாளர்கள் ஜான்சன், நிர்மல்குமார், ஷெரின் சந்திரா ஆகியோர் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். உதவி பொறியாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் தளிகாசலம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்