சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகர்ச்சி நடைபெற்றது.;
திருச்சி மாவட்டம், முசிறி புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா, தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேச கூடாது. மது அருந்திவிட்டு வானம் ஓட்ட கூடாது என அறிவுறுத்தினர்.