குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடந்தது.;
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதை பெற்றோர்கள் நன்கு கவனித்து மாற்றங்கள் ஏதும் இருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது குறைகள் இருப்பினும் இலவச அழைப்பு எண் 1098-க்கு தெரியப்படுத்தலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.