கன்னியாகுமரி முதல் லடாக் வரை 3 நாட்களில் பெருந்துறை சமூக ஆர்வலர் 3,698 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம்; ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கன்னியாகுமரி முதல் லடாக் வரை 3 நாட்களில் பெருந்துறை சமூக ஆர்வலர் 3,698 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம்; ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Update: 2023-06-08 20:51 GMT

பெருந்துறை

பெருந்துறையைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது40). சமூக ஆர்வலரான இவர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை நாடு முழுவதும் பரப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் முடிவு செய்தார்.

அதன்படி அவர் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் கடந்த 1-ந் தேதி அன்று மதியம் 12 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கினார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த 4-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு சீன எல்லையான லடாக்கில் மோட்டார்சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தார். இடையில் எங்கும் ஓய்வு எடுக்காது, 3 ஆயிரத்து 698 கிலோ மீட்டர் தூரத்தை 3 நாட்கள் 13 மணி நேரத்துக்குள் கடந்து சென்றுள்ளார்.

இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு சாதனை பயணத்தை, வெற்றிகரமாக செய்து முடித்த ஞானபிரகாசுக்கு, பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவரும், சமூக ஆர்வலருமான பல்லவிபரமசிவம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்