அரசு கோழியின உற்பத்தி-மேலாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக முட்டை தினத்தையொட்டி மத்திகிரியில் உள்ள அரசு கோழியின உற்பத்தி-மேலாண்மை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-14 18:45 GMT

மத்திகிரி, அக்.15-

ஓசூர் அருகே மத்திகிரியிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி முதல்வர் செல்வன் தலைமையில் மாணவர்கள் பொதுமக்களுக்கு வேகவைத்த முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலுள்ள சமையல் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை பிரிவு மாணவர்களுடன் இணைந்து பல்வேறு வித மதிப்புக்கூடிய முட்டை பொருட்கள் தயாரித்து வினியோகம் செய்தனர். தொடர்ந்து முட்டையின் மகத்துவம் குறித்த கோலப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி- வினா போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தலா 2 முட்டைகள் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர்கள் ஜெயந்தி, சுந்தரேசன், செந்தமிழ் பாண்டியன், ராஜ்மனோகர், எம்.ஜி.ஆர். கல்லூரி துறைத்தலைவர் விஜயலட்சுமி, உதவி பேராசிரியர் முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்