அரிமா சங்க நிர்வாகிகளுக்கு விருது

அரிமா சங்க நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-06-09 19:25 GMT

பெரம்பலூர் அரிமா சங்கத்தின் 39-வது ஆண்டின் தலைவர் ஆனந்த் தலைமையில் செயலாளர் தமிழ்மாறன் (நிர்வாகம்), செயலாளர் தமிழ்ச்செல்வன் (சேவை திட்டம்), பொருளாளர் ராஜேஷ் மற்றும் 39-வது ஆண்டின் நிர்வாகக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்புடன் பொதுமக்களுக்கு தொண்டாற்றி வந்துள்ளது. இது குறித்து சங்க தலைவர் கூறுகையில், இந்த ஆண்டில் கருணை இல்லங்களை சேர்ந்த 365 பேருக்கு 365 நாட்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையைெயாட்டி 685 சிறுவர்-சிறுமிகளுக்கு ஆடைகள், இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து 2 கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு 455 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாவட்ட அரசு ரத்த வங்கியுடன் இணைந்து 4 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 200 யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டுள்ளது. இந்த அரிமா ஆண்டில் 19 ஜோடி கண் தானங்கள் பெறப்பட்டுள்ளது. சுமார் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டு, 1000 விதை கிட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், விதை கிட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கவுல்பாளையத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் அரிமா சங்கம் சார்பில் சிறுவர் பூங்கா, நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிகள் உள்பட ரூ.2 கோடி மதிப்பீட்டில் சேவை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, என்றார்.

இந்நிலையில் பெரம்பலூரில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் சேக்தாவூத், சங்க சாசன தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் அரிமா சங்க பன்னாட்டு இயக்குனர் (தேர்வு) மகேஷ், சங்க தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்