மாற்றுத்திறனாளிகளுக்கு விருது
மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சி,ஜூன்.1-
தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் மாற்றம் காண மாற்றுத்திறனாளிகளை கொண்டாடும் விழா திருச்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம், திருச்சி குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் விளையாட்டு, நடனம், பயிற்சி வகுப்பு நடத்துதல் என ஒவ்வொரு வகையில் திறமைகளை காட்டி சாதனை படைத்தும், பல்வேறு சேவைகளில் சிறந்து விளங்கியதுமான 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கி பாராட்டி கவுரவித்தனர்.முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நடத்தி காட்டிய சாதனை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. விருது பெற்ற மாற்றுத்திறனாளிகளில் 75 சதவீதம் பேர் பட்டதாரிகள் ஆவர். அவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதால் அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டால் மாற்றுத்திறனாளிகளான உங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வீர.திருப்பதி, தலைமை ஆசிரியை மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.