நகைக்கடைக்கு விருது
தூத்துக்குடியில் நகைக்கடைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் 40-ம் ஆண்டு விழாவில் தங்கநகை வணிகத்தில் சிறந்த சில்லறை விற்பனைக்கான விருது அன்னை ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கனிமொழி எம்.பி வழங்க அன்னை ஜூவல்லர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் முருகானந்தம், விநாயகமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.