காரைக்குடி ஆசிரியருக்கு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது

காரைக்குடி ஆசிரியருக்கு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது வழங்கப்பட்டது.

Update: 2022-09-29 18:45 GMT

காரைக்குடி, 

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் முதன் முறையாக சிறந்த சுற்றுலா இயக்குனர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள், சிறந்த தங்கும் விடுதிகள், சிறந்த விமான நிறுவனங்கள் உள்பட 17 விருதுகளை அறிவித்து இந்த விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதுக்கு மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் காரைக்குடியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் மணிகண்டனும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் விருதை வழங்கினார்.விருது பெற்ற ஆசிரியர் மணிகண்டனை சக ஆசிரியகள், தலைமையாசிரியர் உள்பட பலர் பாராட்டினர். விருதுபெற்ற ஆசிரியர் மணிகண்டன் சுற்றுலாத்துறையில் பிரெஞ்சு மொழி பேசும் வழிகாட்டியாகவும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளராகவும், செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு மொழி பேசும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்