அவகோடா பழங்கள் சீசன் தொடக்கம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது அவகோடா பழங்கள் சீசன் தொடங்கியுள்ளது.;

Update: 2022-09-18 18:45 GMT

கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழம் வயிற்று புண்ணை ஆற்றுவதுடன், உடல்சூட்டை தணிக்க வல்லது. மேலும் முகத்திற்கு பூசும் 'பேசியல் கிரீம்' செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் இந்த பழத்தை வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதேபோல் வெளியூர் வியாபாரிகளும் இங்கு வந்து அவகோடா பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது பட்டர் புரூட் சீசன் தொடங்கியுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் சமீபத்தில் தொடர் மழையால் பட்டர் புரூட் பழங்கள் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பட்டர் புரூட் பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ பட்டர் புரூட் பழங்கள் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பட்டர் புரூட் பழங்களில் தற்போது மஞ்சள் நோய் தாக்கி, மரங்கள் அழிந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள், பட்டர் புரூட் மரங்களில் ஏற்பட்டுள்ள நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்