பறவை காய்ச்சல் தடுப்பு முகாம்

குமுளி சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-22 19:00 GMT

தமிழக-கேரள எல்லை பகுதியான குமுளி சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. முகாமில் கால்நடை மருத்துவர் ரஜினிகாந்த் தலைமையில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பராமரிப்பு உதவியாளர் மலர்விழி மற்றும் கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி காய்கறி ஏற்றி வரும் வாகனம், இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றிச்சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனத்தின் டயர்களில் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் எங்கிருந்து வருகிறது, டிரைவர் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் சோதனையின்ேபாது, பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டால் கேரள மாநிலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்