முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதுறு வெளியீடு அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் புகார்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைதளத்தில் அவதுறு வெளியீட்டவர் மீது அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனா்.;

Update: 2022-10-09 18:45 GMT


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் அபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்ட தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அரசு ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை பற்றி அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்