நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்
ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் காண்பதற்காக 2 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன.;
மதுரை,
மதுரையில் நாளை நடைபெறும் உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு புறங்களிலும் கட்டைகளை வைத்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் காண்பதற்காக 2 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன. 15 இடங்களில் குடிநீர் வசதியும், 5 இடங்களில் நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து போட்டி நடைபெறும் இடம் வரை தென்னை நார்கள் கொட்டப்பட்டுள்ளன. அவனியாபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.