கோவில்பட்டியில் ஆட்டோ பேரணி

காந்தி ஜெயந்தியையொட்டி கோவில்பட்டியில் ஆட்டோ பேரணி நடந்தது.;

Update: 2023-10-02 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆட்டோ பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ரோட்டரி சங்க தலைவர் வி.எஸ்.எஸ்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் அருண்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்டேட் வங்கி முன்பு தொடங்கிய ஆட்டோ பேரணி மார்க்கெட் சாலை, திலகராஜ் சந்திப்பு வழியாக காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.

பேரணிக்கு முன்பாக மாணவிகள் காந்தி வேடம் அணிந்து, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி சென்றனர். இதில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் ஜோசுவா, முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முககனி, பள்ளி மாணவ-மாணவிகள், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்