சேலத்தில்மோட்டார் சைக்கிள் மோதிஆட்டோ டிரைவர் பலிவாலிபர் படுகாயம்
சேலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.;
சேலம்,
ஆட்டோ டிரைவர்
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 38), ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மோகன்ராஜ் நேற்று முன்தினம் இரவு குமரகிரி பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் படுகாயம்
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜய் (22) என்ற வாலிபரும் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.