வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் சாவு
ஆற்காடு அருகேவாகனம் மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பெண்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் வீடு திரும்புவதற்காக நேற்று மாலை பூட்டுத்தாக்கில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் வந்தனர்.
மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் அந்த வாகனம் ஆட்டோ டிரைவர் மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் யார், ஆட்டோ டிரைவர் யார் என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.