மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-10-23 18:30 GMT

கரூர் சணப்பிரட்டி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டி-மயிலாடும்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வார காலத்திற்குப் பிறகு சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்