சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-09-20 09:20 IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் போலீஸ் பூத் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் மிதப்பதாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் மற்றும் எழும்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கூவம் ஆற்றில் மிதந்த ஆண் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கூவம் ஆற்றில் பிணமாக கிடந்தவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டை, சாமிநாயக்கன் தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 49) என்பதும், ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. பாலாஜி, சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் சித்ரா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வேறொருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பாலாஜி, கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்