ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

செண்பகராமன்புதூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-25 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செண்பகராமன்புதூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 57), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். இவர் உடல்நிலை சரியில்லாமல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரிட்டோ வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரிட்டோ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்