பயணிகளை ஏற்றுவதில் தகராறு; ஆட்டோ டிரைவர் கைது

பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-18 19:22 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் புதியவன் மகன் முருகன் (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் பெரிய முருகன் (50). இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இவர்களுக்கு இடையே பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரிய முருகன் கம்பியால் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த முருகனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்