செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-07-05 10:37 GMT

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், நாள்தோறும் 100 கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று திடீரென 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது பத்திரபதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுது.

இந்த நிலையில் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை  தெரிவித்துள்ளது.

அதைபோல நேற்று திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ. 1,000 கோடிக்கு கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

.

Tags:    

மேலும் செய்திகள்