சங்கராபுரம் பகுதி கோவில்களில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு
சங்கராபுரம் பகுதி கோவில்களில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போன்று பூட்டை மாரியம்மன் கோவில், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன், சங்கராபுரம் வாசவியம்மன், புற்று மாரியம்மன், நாகாத்தம்மன், வழிகாட்டி மாரியம்மன் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.