தலைவாசல் அருகேபுத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

Update: 2023-07-30 20:25 GMT

தலைவாசல்

தலைவாசல் அருகே புத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அம்மனுக்கு பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர். பெண்கள் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்