கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதலான மோட்டார் சைக்கிள்கள் ஏலம்

கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதலான மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-05-28 12:24 GMT

கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தை உட்பட்ட 5 போலீஸ் நிலைய வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், 256 மோட்டார் சைக்கிள்களை இதுவரை யாரும் உரிமம் கோரவில்லை. இத்தகைய வாகனங்கள் அனைத்தும், வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏலத்தில் பங்கேற்பவர்கள் ஆதார் அல்லது அரசு அடையாள சான்றுடன் வந்து முன்வைப்பு தொகையாக ரூ.1,000 செலுத்தி டோக்கன் பெற வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்று வாகனத்தை ஏலம் எடுக்க முடியாதவர்களின் முன் பணம் ஏலத்தின் முடிவில் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்