ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது.

Update: 2022-11-30 18:45 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, மற்றும் கலைத் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே. கமால்தீன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரத்தின சீலா, ஆத்தூர் கனரா வங்கி மேலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை பாக்கியம் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியை செல்வ சாந்தா, யோக பயிற்சி ஆசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்